Tuesday, April 27, 2010

கருத்து

அது சரி .....
கருப்புக்கொடி காட்டுவது என்பது அனுமதி பெற்றுத்தான் காட்டவேண்டும் என்றால் காட்டவே முடியாது ...அதுதான் அன்றைய நிலை .அதற்காக சு சாமிக்கு காட்டியதற்கும் இதையும் ஒப்பிட்டு pஆர்க்ககூடாது ..
இந்த சம்பவத்தை அடுத்து பரிதி பேசியது ,கருணாநிதி பேசியது துரைமுருகன் பேசியது எல்லாம் ஆளும் திமிரை த்தான் வெளிப்படுத்தியது ..

Monday, April 26, 2010

நேற்றுக்கு முன் தினம் சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழக அரசு சார்பில் நடை பெற்ற டாக்டர் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில், இரு தரப்பினரிடையே கடுமையான மோதல் ஏற்பட்டதை ஊடகங்கள் ஒளிபரப்பின.. இரு தரப்பினருமே நன்கு படித்தவர்கள் . நீதிக்காக நீதி மன்றத்தில் வழகடுபவர்கள். மேடையில் தமிழக முதல்வர் இருக்கிறார் ,உச்ச நீதி மன்ற நீதிபதி ,உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ,மத்திய மாநில சட்டத்துறை அமைச்சரும் உள்ளனர் . முன் வரிசையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலரும் இருந்தனர் .
இந்த நிலையில் அம்பேத்கர் சிலை திறப்பு நிகழ்வை படம் பிடிக்க, செய்தியாக்க பத்திரிக்கையாளர்கள் குவிந்திருந்தனர் .
சிலை திறப்பு முடிந்ததும் முதல்வர் கருணாநிதி பேச ஆரம்பித்தார் .அப்போது பார்வையாளர்கள் தரப்பில் இருந்து நான்கைந்து பேர் எழுந்து ,''அனுமதியோம் அனுமதியோம் முதல்வர் பேச அனுமதியோம்'' என்று முழக்கமிட்டனர் . ஆனால் முதல்வர் பேசிக்கொண்டே சென்றார் ..தி மு க வக்கீல்கள் முழக்கம் இட்டவர்களை நாற்காலிகளை கொண்டும் உருட்டுக்கட்டை செங்கல்களை கொண்டும் கடுமையாக தாக்கினார்கள் ..
முதல்வர் பேசிக்கொண்டே இருந்தார் ....
தாக்குதலை படம் பிடிக்க முயன்ற ஒளிபதிவாளர்களைஉம வக்கீல்கள் போர்வையில் வந்த ரவுடிகள் கடுமையாக அடித்து உதைத்து படக்கருவிகலையும் உடைத்து நொறுக்கினர் ..இதையெல்லாம் பாதுக்கப்பில் இருந்த பொலிஸார் பார்த்து கொண்டு மட்டும் இருந்தனர் ..
ஒருவழியாக அடி உதய் பட்டவர்கள் ஓடி ஒளிந்து கொள்ள ,சோர்ந்து விழ தாக்குதல் முடிவுக்கு வந்தது ..
கல் நெஞ்சு முதல்வர் பேசிக்கொண்டேதான் இருந்தார் ....
என்னகொடுமை இது .சம்பவத்தை கண்டித்து அடக்காத முதலவர் எப்படி நாட்டு மக்கள் மீது அன்பு கொண்டவர் என்று நம்புவது ..;இடிப்பார் இல்லாத மன்னன் ஆட்சி கெடுப்பார் இல்லா கெடும் என்ற திருக்குறளை முதல்வர் கருணாநிதி மறந்து விட்டாரா ...
எது எப்படியோ ...நடந்த நிகழ்வு எல்லாம் திட்ட மிட்டு நடந்தது என்றே நினைக்க தோன்றுகிறது ..ஜனநாயகம் என்று அவர் வாய் பேசுவது மக்களை ஏமாற்றவே ..என்ற முடிவுக்கு வர வேண்டிஉள்ளது ..