Wednesday, November 24, 2010

ஆ.ராசா மீதான சில ஊடகங்களின் தாக்குதல்கள்..
இது இன்னைக்கு சென்னையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கின் தலைப்பின் பெயர்.
இதில் திராவிட நவீன அரசர்களின் தளபதிகளான,கி.வீரமணி,சுபவீ,ஜெகத கஸ்ப்பார், உள்ளிட்டோர் பேசினார்கள்.ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசாவுக்கு எந்த பங்கும் இல்லை.ndc , trai ,பிரதமர்,congerss ,இவர்கள் சொன்னதை அமைச்சர் செய்தார்.இதில் என்ன தவறுஇருக்கு. cig ரிப்போர்ட் ராசா எந்த தவறும் செய்யல.பணம் வாங்கினார் அப்படின்னு சொல்லல. என்று கூறியும் சில பேர் பெற விருந்த லாபங்களை
ராசா தடுத்து நிறுத்தி சாதனை புரிந்தார்,என்றும் பேசி தங்கள் கருணாநிதி விசுவாசத்தை மேடை ஏற்றினார்கள்.
கூட்டத்தில் அப்படி ஒரு வரவேற்ப்பு..குஷி,உற்சாக,கைதட்டல்கள். இருக்கட்டும்.இதை வேற இடத்தில விவாதிப்போம்.
ராசா மீது உள்ள குற்றசாட்டு என்ன?2g ஸ்பெக்ட்ரம் ஊழலால் நாட்டிற்கு ஒரு லச்சத்து எழுப்பத்தி ஆராயிரம் கோடி ரூபாயிக்கு மேல் வருமான இழப்பு ஏற்ப்பட்டுள்ளது என்பது தானே..இதற்க்கு பதில் சொல்வதை விட்டு விட்டு அவர் தலித்..திராவிட தளபதி,இப்படி பேசினா எப்படி?
தலித் ஊழல் பண்ண மாட்டார் அப்படின்னு என்ன சட்ட வரை முறை இருக்கா.என்ன? எனக்கு தெரிஞ்சு தமிழ் நாட்டில் இருக்கிற எல்லா தலித் இயக்கங்களும் ஊழல்,முறைகேடு,கட்ட பஞ்சாயத்தில் வளர்ந்தவைதான்.இது ஒருபுறம் இருக்கட்டும்.
ராசாவின் திட்டத்தால்,நாட்டில் எல்லோர் கைல யும் chellphone இருக்கு..என்கிறார்களே..அதை பயன்படுத்தும்
நபர்களின் வாழ்க்கை முன்னேறி உள்ளதா பொருளாதார ரீதியில் என்றால் இல்லை.விண்ணை முட்டும் விலைவாசி,கண்ணை பிதுக்கும் மின்வெட்டு,இடுப்பை ஒடிக்கும் போக்குவரத்து சிக்கல்கள்...இப்படி நிறைய
அன்றாடம் தமிழன்_இவர்கள் பாசையில் சொன்னால் திராவிடன் ,சுமந்து திரிகிறான்...இதைஎல்லாம இந்த
படித்த மேதாவிகள்உலகம் அறிந்த உத்தமர்கள் ஒத்துக்கொள்கிறார்களா?,
பாவிகள்..இந்த இடத்தில பாரதியார் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது..
"படித்தவன் பாவம் செய்தால் போவான்..அய்யோ ஐயோ என்று போவான்".. இது இவர்களுக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும்ம்.

Monday, August 23, 2010

சேலம் மாவட்ட வரலாறு.




தமிழக மாவட்டங்கள் உலக வரலாற்றில் தனி இடம் பெற்றவை.வேளாண் உற்பத்தி,கலை இலக்கிய படைப்புகள்,ஆடை அலங்கார ஆக்கங்கள் உள்ளிட்ட வாழ்வின் அனைத்து நிலைகளிலும் மற்ற நாடுகளுக்கு சவால்விடும் சிறப்புகள் கொண்டவை.
இவற்றில் முதன்மையான மாவட்டமாகிய சேலம் மாவட்டைத்தை குறித்த வரலாற்று செய்திகளை இங்கு காண்போம்.

Wednesday, August 18, 2010

மீனவர்கள் பேட்டி.

இலங்கை கடற்படை யினரால் தொடர்ந்து தாக்கபடுவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல்,தமிழக மீனவாகள் பேராசையால்தான் எல்லை தாண்டி சென்று மீன்பிடிக்கிறார்கள் என்று மாநிலங்களவையில் வெளிஉறவு அமைச்சர் திரு எஸ் எம் கிருஷ்ணா பேசியதை கண்டித்து அகில இந்திய பாரம்பரிய மீனவாகள் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சென்னையில்,
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அகிலஇந்திய பாரம்பரிய மீனவர்கள் சங்கத்தின் தலைவர் திரு.எஸ்.எ.மகேஷ், இன்றைய காலகட்டத்தில் எல்லைதாண்டி கடல்பகுதியில் மீன்பிடிக்க செல்வது என்பது சில நேரங்களில் தவிர்க்க முடியாதது.அதற்காக துப்பாக்கி சூடு நடத்துவது என்பது எந்த நாட்டிலும் இல்லாத நடைமுறை.இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளன.
இந்நிலையில்,கேள்வி நேரத்தின் போது இலங்கை அரசை கண்டிக்காமல் தமிழக மீனவர்களை குறைசொல்லி விமர்சித்து பேசிய எஸ் எம் கிருஷ்ணாவின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.இதற்க்கு
எதிர்ப்பு தெரிவித்து மாநில அளவில் மாபெரும் கண்டன ஆர்ர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். என்று தெரிவித்தார்.

Friday, May 14, 2010

தி மு க வில் நடிகை குஷ்பு

குஷ்பு தி மு க வில் சேருவது .......இதில் அதிசயம் ஆச்சரியம் ஒன்றுமில்லை ..இதுவும் ஒரு ஒப்பந்தம்தான்.
1949 இல் அந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இது வரை பல லச்சம் பேர் சேர்ந்திருப்பார்கள்.
கட்சியை விட்டு விலகி இருப்பார்கள்.ஆகா ஒரு சாதரணமான நிகழ்வுதான்..ஆனால் குஷ்பு தி மு க வில் சேர்வதாக கூறப்படுகின்ற காலத்தை பார்க்கிற போது சமூக அக்கறை உள்ளவர்கள் நிச்சயம் யோசிக்கத்தான் வேண்டி உள்ளது..
வெறும் சினிமா கவர்ச்சி,வியாபார டிவி நிகழ்ச்சி புகழ் இவற்றை மட்டுமே அவரை தி மு க சேர்க்க விரும்பினால் அதற்க்கான விலையை கொடுத்துதான் ஆகவேண்டும். மராட்டிய மாநிலத்தில் பிறந்து பிழைப்புக்காக தமிழகம் வந்து திருமணம் செய்துகொண்டு நாடறிந்த பல்வேறு சேவைகள் புரிந்து! இப்போது தி மு க வில் சேர போகிறார்.
அவர் பிழைப்பை நடத்த என்னமோ செய்கிறார் என்று இந்த விஷயத்தை விட்டு விட முடியாது.ஏன் என்றால் அவர் முன்பு செய்தது வியாபாரம்.இப்போது செய்வது செய்ய இருப்பது சமூக சேவையா என்பதில் பெருத்த சந்தேகம் உள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ் வார இதழ் ஒன்றில் திருமணத்திற்கு முந்தைய பாலுறவு குறித்து குஷ்பு கூறிய கருத்தால் மாநில அளவில் ஏற்ப்பட்ட கண்டனம் தமிழ்நாட்டில் பல நீதி மன்றத்தில் அரசியல் இயக்கங்கள் வழக்கு தொடர்வதில் முடிந்தது.
விளைவு நாடறிந்தது.
அந்த வழக்குகளுக்கு முடிவை அன்மையில உச்ச நீதி மன்றம் அறிவித்தது..எதிர் வழக்காடிய வழக்கு அறிஞ்ர்களை பார்த்து உங்களுக்கு பெண் பிள்ளைகள் உண்டா அவர்கள் எப்படி குஷ்புவின் கருத்தால் பாதித்தார்கள் என்று அதிரடி கேள்விகளை கேட்டு துளைத்து எடுத்தனர். அதோடு நிற்காமல் புராண விளக்கங்களை இப்போது உதாரணமாக எடுத்து கொள்ள முடியாது என்றும் வினோத விளக்கங்களை கொடுத்து வழக்கை முடித்தது உச்ச நீதி மன்றம்..
இது இந்திய கலாச்சாரத்தை நம்பி வாழ்பவர்களை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது..(இந்த இடத்தில நான் கற்பு பற்றி விவாதிப்பது மகா கவி பாரதி கவிதை அடிப்படையில் )சேது சமுத்திர திட்டம் நிறுத்த பட்ட போது இதே உச்ச நீதி மன்றம் கடவுள் கடல் கடந்த இடத்தில எப்படி தோண்டலாம் என்று கண்டித்து தடை போட்டது எல்லோர்க்கும் நினைவிருக்கும் ..
ஆக தன்னை காத்த தி மு க விற்கு குஸ்பு செலுத்தும் நன்றிக்கடனாகதான் இது தெரிகிறது என்று கருத வேண்டிஉள்ளது.
கூடவே இன்னொரு கருத்து ....
குஸ்புவை சேர்த்து தி மு க வை வளர்க்க வேண்டிய அளவிற்கு அந்த கட்சி பெரும் பின்னடைவை,பல வீனத்தை அடைந்துள்ளதா ?

Sunday, May 2, 2010

இலக்கிய கல்வி

இலக்கியம் ....இந்த வார்த்தை அதி முக்கியத்துவமானது ..
வாழ்க்கையின் சிக்கல்களை சிந்தித்து ,அவற்றில் இருந்து நம்மை விடுவித்துக்கொள்ள ,அவற்றை வெற்றிகொள்ள உதவுவது இலக்கியம் ..
மனதை புதுப்பித்துக்கொள்ள ,வாழ்வின் அழகை நுகர வழி காட்டுவது இலக்கியம் .

Tuesday, April 27, 2010

கருத்து

அது சரி .....
கருப்புக்கொடி காட்டுவது என்பது அனுமதி பெற்றுத்தான் காட்டவேண்டும் என்றால் காட்டவே முடியாது ...அதுதான் அன்றைய நிலை .அதற்காக சு சாமிக்கு காட்டியதற்கும் இதையும் ஒப்பிட்டு pஆர்க்ககூடாது ..
இந்த சம்பவத்தை அடுத்து பரிதி பேசியது ,கருணாநிதி பேசியது துரைமுருகன் பேசியது எல்லாம் ஆளும் திமிரை த்தான் வெளிப்படுத்தியது ..

Monday, April 26, 2010

நேற்றுக்கு முன் தினம் சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழக அரசு சார்பில் நடை பெற்ற டாக்டர் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில், இரு தரப்பினரிடையே கடுமையான மோதல் ஏற்பட்டதை ஊடகங்கள் ஒளிபரப்பின.. இரு தரப்பினருமே நன்கு படித்தவர்கள் . நீதிக்காக நீதி மன்றத்தில் வழகடுபவர்கள். மேடையில் தமிழக முதல்வர் இருக்கிறார் ,உச்ச நீதி மன்ற நீதிபதி ,உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ,மத்திய மாநில சட்டத்துறை அமைச்சரும் உள்ளனர் . முன் வரிசையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலரும் இருந்தனர் .
இந்த நிலையில் அம்பேத்கர் சிலை திறப்பு நிகழ்வை படம் பிடிக்க, செய்தியாக்க பத்திரிக்கையாளர்கள் குவிந்திருந்தனர் .
சிலை திறப்பு முடிந்ததும் முதல்வர் கருணாநிதி பேச ஆரம்பித்தார் .அப்போது பார்வையாளர்கள் தரப்பில் இருந்து நான்கைந்து பேர் எழுந்து ,''அனுமதியோம் அனுமதியோம் முதல்வர் பேச அனுமதியோம்'' என்று முழக்கமிட்டனர் . ஆனால் முதல்வர் பேசிக்கொண்டே சென்றார் ..தி மு க வக்கீல்கள் முழக்கம் இட்டவர்களை நாற்காலிகளை கொண்டும் உருட்டுக்கட்டை செங்கல்களை கொண்டும் கடுமையாக தாக்கினார்கள் ..
முதல்வர் பேசிக்கொண்டே இருந்தார் ....
தாக்குதலை படம் பிடிக்க முயன்ற ஒளிபதிவாளர்களைஉம வக்கீல்கள் போர்வையில் வந்த ரவுடிகள் கடுமையாக அடித்து உதைத்து படக்கருவிகலையும் உடைத்து நொறுக்கினர் ..இதையெல்லாம் பாதுக்கப்பில் இருந்த பொலிஸார் பார்த்து கொண்டு மட்டும் இருந்தனர் ..
ஒருவழியாக அடி உதய் பட்டவர்கள் ஓடி ஒளிந்து கொள்ள ,சோர்ந்து விழ தாக்குதல் முடிவுக்கு வந்தது ..
கல் நெஞ்சு முதல்வர் பேசிக்கொண்டேதான் இருந்தார் ....
என்னகொடுமை இது .சம்பவத்தை கண்டித்து அடக்காத முதலவர் எப்படி நாட்டு மக்கள் மீது அன்பு கொண்டவர் என்று நம்புவது ..;இடிப்பார் இல்லாத மன்னன் ஆட்சி கெடுப்பார் இல்லா கெடும் என்ற திருக்குறளை முதல்வர் கருணாநிதி மறந்து விட்டாரா ...
எது எப்படியோ ...நடந்த நிகழ்வு எல்லாம் திட்ட மிட்டு நடந்தது என்றே நினைக்க தோன்றுகிறது ..ஜனநாயகம் என்று அவர் வாய் பேசுவது மக்களை ஏமாற்றவே ..என்ற முடிவுக்கு வர வேண்டிஉள்ளது ..