Friday, May 14, 2010

தி மு க வில் நடிகை குஷ்பு

குஷ்பு தி மு க வில் சேருவது .......இதில் அதிசயம் ஆச்சரியம் ஒன்றுமில்லை ..இதுவும் ஒரு ஒப்பந்தம்தான்.
1949 இல் அந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இது வரை பல லச்சம் பேர் சேர்ந்திருப்பார்கள்.
கட்சியை விட்டு விலகி இருப்பார்கள்.ஆகா ஒரு சாதரணமான நிகழ்வுதான்..ஆனால் குஷ்பு தி மு க வில் சேர்வதாக கூறப்படுகின்ற காலத்தை பார்க்கிற போது சமூக அக்கறை உள்ளவர்கள் நிச்சயம் யோசிக்கத்தான் வேண்டி உள்ளது..
வெறும் சினிமா கவர்ச்சி,வியாபார டிவி நிகழ்ச்சி புகழ் இவற்றை மட்டுமே அவரை தி மு க சேர்க்க விரும்பினால் அதற்க்கான விலையை கொடுத்துதான் ஆகவேண்டும். மராட்டிய மாநிலத்தில் பிறந்து பிழைப்புக்காக தமிழகம் வந்து திருமணம் செய்துகொண்டு நாடறிந்த பல்வேறு சேவைகள் புரிந்து! இப்போது தி மு க வில் சேர போகிறார்.
அவர் பிழைப்பை நடத்த என்னமோ செய்கிறார் என்று இந்த விஷயத்தை விட்டு விட முடியாது.ஏன் என்றால் அவர் முன்பு செய்தது வியாபாரம்.இப்போது செய்வது செய்ய இருப்பது சமூக சேவையா என்பதில் பெருத்த சந்தேகம் உள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ் வார இதழ் ஒன்றில் திருமணத்திற்கு முந்தைய பாலுறவு குறித்து குஷ்பு கூறிய கருத்தால் மாநில அளவில் ஏற்ப்பட்ட கண்டனம் தமிழ்நாட்டில் பல நீதி மன்றத்தில் அரசியல் இயக்கங்கள் வழக்கு தொடர்வதில் முடிந்தது.
விளைவு நாடறிந்தது.
அந்த வழக்குகளுக்கு முடிவை அன்மையில உச்ச நீதி மன்றம் அறிவித்தது..எதிர் வழக்காடிய வழக்கு அறிஞ்ர்களை பார்த்து உங்களுக்கு பெண் பிள்ளைகள் உண்டா அவர்கள் எப்படி குஷ்புவின் கருத்தால் பாதித்தார்கள் என்று அதிரடி கேள்விகளை கேட்டு துளைத்து எடுத்தனர். அதோடு நிற்காமல் புராண விளக்கங்களை இப்போது உதாரணமாக எடுத்து கொள்ள முடியாது என்றும் வினோத விளக்கங்களை கொடுத்து வழக்கை முடித்தது உச்ச நீதி மன்றம்..
இது இந்திய கலாச்சாரத்தை நம்பி வாழ்பவர்களை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது..(இந்த இடத்தில நான் கற்பு பற்றி விவாதிப்பது மகா கவி பாரதி கவிதை அடிப்படையில் )சேது சமுத்திர திட்டம் நிறுத்த பட்ட போது இதே உச்ச நீதி மன்றம் கடவுள் கடல் கடந்த இடத்தில எப்படி தோண்டலாம் என்று கண்டித்து தடை போட்டது எல்லோர்க்கும் நினைவிருக்கும் ..
ஆக தன்னை காத்த தி மு க விற்கு குஸ்பு செலுத்தும் நன்றிக்கடனாகதான் இது தெரிகிறது என்று கருத வேண்டிஉள்ளது.
கூடவே இன்னொரு கருத்து ....
குஸ்புவை சேர்த்து தி மு க வை வளர்க்க வேண்டிய அளவிற்கு அந்த கட்சி பெரும் பின்னடைவை,பல வீனத்தை அடைந்துள்ளதா ?

Sunday, May 2, 2010

இலக்கிய கல்வி

இலக்கியம் ....இந்த வார்த்தை அதி முக்கியத்துவமானது ..
வாழ்க்கையின் சிக்கல்களை சிந்தித்து ,அவற்றில் இருந்து நம்மை விடுவித்துக்கொள்ள ,அவற்றை வெற்றிகொள்ள உதவுவது இலக்கியம் ..
மனதை புதுப்பித்துக்கொள்ள ,வாழ்வின் அழகை நுகர வழி காட்டுவது இலக்கியம் .