Wednesday, August 18, 2010

மீனவர்கள் பேட்டி.

இலங்கை கடற்படை யினரால் தொடர்ந்து தாக்கபடுவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல்,தமிழக மீனவாகள் பேராசையால்தான் எல்லை தாண்டி சென்று மீன்பிடிக்கிறார்கள் என்று மாநிலங்களவையில் வெளிஉறவு அமைச்சர் திரு எஸ் எம் கிருஷ்ணா பேசியதை கண்டித்து அகில இந்திய பாரம்பரிய மீனவாகள் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சென்னையில்,
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அகிலஇந்திய பாரம்பரிய மீனவர்கள் சங்கத்தின் தலைவர் திரு.எஸ்.எ.மகேஷ், இன்றைய காலகட்டத்தில் எல்லைதாண்டி கடல்பகுதியில் மீன்பிடிக்க செல்வது என்பது சில நேரங்களில் தவிர்க்க முடியாதது.அதற்காக துப்பாக்கி சூடு நடத்துவது என்பது எந்த நாட்டிலும் இல்லாத நடைமுறை.இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளன.
இந்நிலையில்,கேள்வி நேரத்தின் போது இலங்கை அரசை கண்டிக்காமல் தமிழக மீனவர்களை குறைசொல்லி விமர்சித்து பேசிய எஸ் எம் கிருஷ்ணாவின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.இதற்க்கு
எதிர்ப்பு தெரிவித்து மாநில அளவில் மாபெரும் கண்டன ஆர்ர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment